ஜேர்மனி எல்லையில் இறுகும் கட்டுப்பாடுகள்! மேலும் 2 அண்டை நாடுகளுக்கு பயணத் தடை அறிவிப்பு

Report Print Ragavan Ragavan in ஜேர்மனி
0Shares

புதிய கொரோனா வைரஸ் வகைகளை நாட்டுக்குள் நுழையவிடாமல் தக்க வைத்துக் கொள்ள ஜேர்மனி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14) முதல் கூடுதல் நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.

ஜேர்மனி வரும் மார்ச் 7-ஆம் திகதி வரை பூட்டுதலை நீட்டித்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக அதன் அண்டை நாடுகளான செக் ரிபப்ளிக் மற்றும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் இன்று முதல் பயணத்தைத் தடை விதித்துள்ளது.

எல்லை பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்காக ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் அணிதிரட்டப்பட்டுள்ளனர்.

மேலும், அரசுக்கு சொந்தமான ரயில் நிறுவனமான Deutsche Bahn நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

ஜேர்மனி கடந்த மாதம் பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், போர்ச்சுகல் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளுக்கு பயணத் தடை விதித்தது.

இந்த நாடுகளில் இருந்து நாடு திரும்பும் ஜேர்மானியர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு மட்டுமே ஜெர்மனியில் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.

இருப்பினும், தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள எந்த நாடுகளில் இருந்து ஜேர்மானிய குடிமக்களே வந்தாலும் கொரோனா சோதனையில் எதிர்மறையான முடிவுகளைப் பெற்ற சாண்றிதழை காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், தவறினால் திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி அரசாங்கம் அதன் மக்களுக்கு வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைவருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்