ஜேர்மனி தன் குடிமக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுவருகிறது.
மார்ச் 1ஆம் திகதிமுதல், ஜேர்மனியில் அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஆகும் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிகிறது.
இந்த அதிவேக கொரோனா பரிசோதனைகள் அன்றாட வாழ்வில் பாதுகாப்பான ஒரு உணர்வை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள Spahn, குறிப்பாக பள்ளிகள் மற்றும் பகல் நேர குழந்தைகள் காப்பகங்களிலும் அவை பெரிதும் உதவியாக இருக்கும் என்கிறார்.