ஜேர்மனியில் தீவிரமாக பரவும் பிரித்தானிய வகை கொரோனா வைரஸ்! சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

Report Print Ragavan Ragavan in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியில் B.1.1.7 எனப்படும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருவதாக சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் எச்சரித்துள்ளார்.

ஜேர்மனியில் பரிசோதிக்கப்பட்ட நேர்மறையான சோதனை மாதிரிகளில் பிரித்தானிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் (B.1.1.7) விகிதம் கடந்த இரண்டு வாரங்களில் 6 சதவீதத்திலிருந்து 22 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஜென்ஸ் ஸ்பான் கூறியுள்ளார்.

பேர்லினில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்பான், ​​முந்தைய வைரஸின் விகாரங்களை விட B.1.1.7 வைரஸ் ஜேர்மனியில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறும் என்று எச்சரித்துள்ளார்.

ஜேர்மனியில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒருவருக்கு B.1.1.7 வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரசின் பாதிப்பு மிகக் குறைவாக 1.5 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது.

உருமாறிய வைரஸ்கள் பரவினாலும் ஜேர்மனியில் நோய்த்தொற்று புள்ளிவிவரங்கள் வீழ்ச்சியடைந்து வருவது ஊக்கமளிப்பதாக சுகாதார அமைச்சர் கூறினார்.

மேலும், மார்ச் மாதத்தில் தொடங்கி அனைவருக்கும் இலவச விரைவான ஆன்டிஜென் கோவிட் -19 சோதனைகள் வழங்கப்படும் என்று ஸ்பான் அறிவித்துள்ளார்.

ஜேர்மனி கடந்த 24 மணி நேரத்திற்குள் 7,556 புதிய பாதிப்புக்களையும், 560 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்