கொரோனா பரவல் முடிவுக்கு வர இதை கட்டாயம் செய்தாக வேண்டும்: ஜேர்மன் சேன்ஸலர் மெர்க்கல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares

உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வரை கொரோனா பரவல் முடிவுக்கு வராது என்று ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஜி7 உறுப்பு நாடுகளுக்குகிடையேயான கூட்டமைப்பில் பேசும்போது மெர்க்கல் இதனை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்தை செலுத்தினால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும்.

எனவே ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து சென்றடைய வேண்டும் என்று சேன்ஸலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கூட்டமைப்பில் ஏழை நாடுகளுக்கு வழங்கவுள்ள கொரோனா தடுப்பு மருந்து எண்ணிக்கை தொடர்பில் விவாதிக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

சீனாவை தொடர்ந்து, பிரித்தானியாவில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக், அமெரிக்க நிறுவனங்களின் மாடர்னா மற்றும் பைசர் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

இந்தநிலையில் பிரித்தானியாவில் பரவும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்