இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்ட ஜேர்மன் சேன்ஸலர் மெர்க்கல்: தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்கு கோரிக்கை

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியில் தற்போது கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை காணப்படுவதாக சேன்ஸலர் மெர்க்கல் முதன் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட கூட்டம் ஒன்றில், தனது கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சேன்ஸலர் மெர்க்கல் இதை கூறியுள்ளார்.

மட்டுமின்றி, கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் மார்ச் 7 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்துவது என்பது படிப்படியாக செய்யப்பட வேண்டும் என்றும் எச்சரித்ததாக சேன்ஸலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், நோய்த்தொற்றுகள் மீண்டும் உயரத் தொடங்கினால் ஊரடங்கு நடவடிக்கைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதை கவனமாக செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசுடனான எல்லைகளை மூடியதாலையே, அதிக பாதிப்பில் இருந்து ஜேர்மனி தப்பியதாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மிக மந்தமான தடுப்பூசி விநியோகம், மிக வேகமாக பரவும் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றுகள் என இனி எந்தவொரு கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது குறித்து விவாதிப்பதில் ஜேர்மனியை மிகவும் கடினமான சூழலில் தள்ளியுள்ளது.

சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் எனில், பரிசோதனைகள் துரிதப்படுத்த வேண்டும், பரிசோதனை மையங்களும் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் மெர்க்கல்.

மேலும், பிரித்தானிய தயாரிப்பான கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது நம்பட்த்ஹகுந்தது, அதனால் மக்கள் கண்டிப்பாக பிரித்தானிய தயாரிப்பு தடுப்பூசியை எடுத்துக்கொள்ள சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்