ஜேர்மனியில் மீண்டும் பொதுமுடக்கம் நீட்டிப்பு: எப்போது வரை?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியில் மீண்டும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட உள்ளது. ஜேர்மனி பொதுமுடக்கத்தை மார்ச் மாதம் 28ஆம் திகதி வரை நீட்டிக்க திட்டமிட்டுவரும் அதே நேரத்தில், மார்ச் 8ஆம் திகதியிலிருந்து சில கட்டுப்பாடுகளை நெகிழ்த்தவும் முடிவு செய்துள்ளது.

ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் இது குறித்து நாளை மாகாண தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.

பயங்கரமாக புதுவகை கொரோனா வைரஸ்கள் பரவுவதைத் தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், மெர்க்கல் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த திட்டமிட்டிருந்த இலக்கும் தள்ளிப்போகிறது.

ஏழு நாட்களில், 100,000 பேரில் 35 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்படும் நிலை ஏற்படும்போது பொதுமுடக்கத்தை நெகிழ்த்தலாம் என மெர்க்கல் இலக்கு வைத்திருந்தார்.

ஆனல், நேற்றைய நிலவரப்படி அந்த எண்ணிக்கை 65.8ஆக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்படும் காலமும் தள்ளிப்போயுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்