பறக்கும் விமானத்தில் சுருண்டு விழுந்த ஜேர்மன் எம்.பி... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: பின்னர் நடந்த துயரம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares

ஜேர்மன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் பறக்கும் விமானத்தில் சுருண்டு விழுந்த நிலையில், விமான நிலையத்திலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஜேர்மனியின் CDU கட்சி உறுப்பினரான 53 வயது Karin Strenz என்பவரே திடீரென்று மரணமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கியூபா நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு திரும்பிய நிலையிலேயே அவர் பறக்கும் விமானத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.

உடனடியாக விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசரமாக அயர்லாந்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஆனால் முதலுதவி சிகிச்சையின் போதே அவர் இறந்துள்ளதாக அவசர உதவி மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

53 வயது Karin Strenz கியூபாவுக்கு பயணப்பட்டதன் காரணம் தொடர்பில் உறுதியாக தகவல் ஏதும் கூறப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

2009 முதல் ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் Karin Strenz 2009, 2013 மற்றும் 2017 தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தார்.

2002 முதல் 2006 வரை மற்றும் 2007 முதல் 2009 வரை அவர் வடகிழக்கில் மாநில சபை அவை உறுப்பினராக இருந்தார்.

2020ல் இவர் மீது 4 மில்லியன் யூரோ முறைகேடு தொடர்பில் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்