ஜேர்மனியில் கொரோனாவால் டிஜிட்டல் யுகத்திலிருந்து மீண்டும் பழைய வழக்கம் ஒன்றிற்கு திரும்பியுள்ள மக்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

முதல் மொபைல் தொலைபேசி 1973ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், சுமார் பத்தாண்டுகள் முன்பு வரை தபால் அட்டைகள் அனுப்பும் பழக்கம் உலகமெங்கும் தொடர்ந்தவண்ணம்தான் இருந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவது அவ்வளவு பிரபலமாக இருந்த காலகட்டம் போய், மொபைலில் வாழ்த்து அனுப்பும் ஒரு காலகட்டமும் வந்தது.

வாழ்த்து அட்டைகள் அனுப்புவது, கடிதங்கள் அனுப்புவது, தந்தி அனுப்புவது என பல விடயங்களை மொபைல்கள் தங்களுக்கு உரிமையாக்கிக்கொண்டன.

இந்நிலையில், இந்த கொரோனா ஊரடங்கால், ஜேர்மனியில் மீண்டும் ஒரு பழைய பழக்கத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

ஆம், முன்பு போலவே மக்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்ள தபால் அட்டைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். கடந்த டிசம்பரை விட இந்த டிசம்பரில் 11 சதவிகிதம் அதிக தபால் அட்டைகள் புழங்கியதாக ஜேர்மன் தபால் துறை தெரிவித்துள்ளது.

தபால் துறையில் கொரோனாவால் இடையூறுகள் ஏற்பட்ட நிலையிலும், கடந்த ஆண்டில் மட்டும், 120 மில்லியன் தபால் அட்டைகள் அனுப்பட்டுள்ளன.

குறிப்பாக, நீங்கள் இங்கே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பொருள்படும், ’wish you were here’ என்று கூறும் தபால் அட்டைகள் அதிகம் அனுப்பட்டுள்ளன.

அடுத்ததாக பிறந்தநாள் அட்டைகள் அதிகம் அனுப்பப்பட்டுள்ளன.இதுபோக, கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டில் அடைந்து கிடந்ததால், மக்களில் பலர் ஒரு புது பொழுதுபோக்காக தபால் அட்டைகளை அனுப்பத் தொடங்கியிருக்கலாம் என்றகருத்தும் உருவாகியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்