தடுப்பூசி ஏற்றுமதி தடைக்கு எதிராக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் von der Leyen-க்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஜேர்மன் உறுப்பினர் Anna Cavazzini எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் von der Leyen, கண்டத்தில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஜேர்மனி உறுப்பினர் Anna Cavazzini, ஐரோப்பிய ஆணைத்தின் நிலையை நான் புரிந்து கொள்கிறேன், ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் யோசனை எங்கிருந்து வந்தது.
ஏனென்றால் அதிகரித்து வரும் தொற்று எண்களைப் பார்த்தால், நியாயமற்ற விநியோகத்தில் நம்மிடம் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், ஐரோப்பிய ஒன்றிய பிரச்சினைக்கு ஏற்றுமதி தடை ஒரு தீர்வாக இருக்காது என Anna Cavazzini ஒப்புக்கொண்டார்.
மற்ற நாடுகளும் இதை கடைபிடிக்கக்கூடும் என்பதால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் மிக மோசமான ஒன்று என நான் கருதுகிறேன்.
ஆயினும்கூட, தற்போது முக்கியமான பிரச்சினைகளை நாம் இப்போது தீர்க்க வேண்டும் என Anna Cavazzini கூறினார்.