பிரித்தானியாவை மிரட்டும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு ஜேர்மனி ஆதரவு! ஏஞ்சலா மெர்க்கல் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஜேர்மனி
0Shares

பிரித்தானியாவை அச்சுறுத்திய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் von der Leyen-க்கு ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

முன்னதாக கண்டத்தில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்போம் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் von der Leyen என அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் von der Leyen-ஐ தான் ஆதரிப்பதாக ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராஜெனெகாவுடன் நமக்கு பிரச்சினை உள்ளது, இந்த விவகாரத்தில் பொறுப்புடன் முடிவு எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குறைவான தடுப்பூசி டோஸ்களை விநியோகம் செய்துள்ள அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், பிரித்தானியா உடனான தனது ஒப்பந்தத்தை முழுமையாக வழங்கியிருப்பது ஐரோப்பிய அதிகாரிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்