ஜேர்மனிக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா... விவரம் செய்திக்குள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில், ரஷ்ய எரிவாயு திட்டம் ஒன்றின் தொடர்பில் அமெரிக்கா ஜேர்மனிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுக்க உள்ளது.

Nord Stream 2 pipeline என்ற ஒரு திட்டத்தின்கீழ், ரஷ்யாவிலிருந்து குழாய்கள் மூலம் ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு வருவதற்காக, குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டத்திற்கு சுமார் பத்து ஆண்டுகளாக அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

அமெரிக்க மாகாணங்களின் செயலரான Antony Blinken, இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுக்கே முரண்பாடானது என்றும், இது தொடர்பாக, தான் ஜேர்மனியின் பிரதிநிதியான Heiko Maasஇடம் பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியோ, அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அந்த எரிவாயு திட்டத்திற்கான குழாய்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அழுத்தம் கொடுத்துவருகிறது.

இந்த திட்டம் ஒரு மோசமான திட்டம் என அதிபர் ஜோ பைடன் கருதுவதாக தெரிவித்துள்ள Blinken, அது ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் கெட்டதையே செய்யும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளுக்கே அது முரணானது என்றும் அவர் கருதுவதாக தெரிவித்தார்.

போலந்துக்கு நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த திட்டம், எரிவாயு தேவைகளுக்காக ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலையை ஐரோப்பாவுக்கு உருவாக்கிவிடுவதோடு, அமெரிக்காவின் இயற்கை திரவ எரிவாயு வர்த்தகத்துக்கும் போட்டியாக அமையும் என அமெரிக்கா கருதுகிறது.

ஆனால், அந்த திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணி 95 சதவிகிதம் முடிந்துவிட்டது, செப்டம்பரில் அது முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ரஷ்யாவை சார்ந்திருக்கச் செய்து, வலுவிழக்கச் செய்யும் ஒரு திட்டமாக Nord Stream 2 திட்டத்தை ரஷ்யா பயன்படுத்தலாம் என அஞ்சுவதால்தான், அத்திட்டத்தைக் கைவிடுமாறு ஜேர்மனியை அமெரிக்கா எச்சரிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்