முக்கிய திருப்பம்! ஜேர்மனியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், ஜேர்மனியில் ஏப்ரல் 18-ஆம் திகதி வரை கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.

குறிப்பாக, ஏப்ரல் 4ம் திகதி ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏப்ரல் 1 முதல் 5 வரை பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படும் என அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்திருந்தார்.

ஏஞ்சலா மெர்க்கலின் அறிவிப்பு கடும் விமர்சனத்திற்குள்ளானது, அதுமட்டுமின்றி மக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.

கடும் விமர்சனத்தை தொடர்ந்து இன்று மாநில தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் பேசிய அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஈஸ்டர் பண்டிகைக்கு கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படாது என்று தெரிவித்ததாக கூட்டத்தில் பங்கேற்ற பலர் தெரிவித்துள்ளனர்.

மெர்க்கலின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே ஏற்பட்ட கோபத்தை சற்று தனிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்