முதல் முறையாக ஜேர்மனியில் உச்சம் தொட்ட கொரோனா தொற்று

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியில் ஜனவரிக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா தொற்று உச்சம் தொட்டுள்ளது. ஜனவரியிலிருந்து இதுவரை இந்த அளவுக்கு கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 22,657 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது என்ற கணக்கும் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில் 100,000 பேரில் 113.3 பேருக்கு தொற்று பரவியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதிவாக்கில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறையத் தொடங்கியதால், மக்கள் மனதில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், அதற்குப்பின் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது, தற்போது அது உச்சம் தொட்டுள்ளது.

அத்துடன் ஜேர்மனியில் R எண்ணும் 1 ஆக உள்ளது. அதன் பொருள் என்னவென்றால், 100 பேருக்கு கொரோனா தொற்று இருந்தால், அவர்கள் 100 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்றை உருவாக்கமுடியும் என்பதாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்