'பயங்கரமான விளைவு காத்திருக்கிறது' ஜேர்மானிய மாநிலங்களுக்கு ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை!

Report Print Ragavan Ragavan in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்றாவது அலையால் ஐரோப்பா முழுவதும் தொற்று நோய் அதிகரிக்கும் நிலையிலும், சில மாநிலங்கள் தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுவது அதிருப்தியை அளித்திருப்பதாக அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.

"நாட்டில் அவசரகால தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை எல்லா மாநிலங்களிலும் மதிக்கப்படவில்லை. இதற்கு பயங்கரமான விளைவு காத்திருக்கிறது" எனறு அவர் எச்சரித்துள்ளார்.

நாடு மிக ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், இப்போது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத ஆபத்தான வைரஸ்களால் மிகவும் பாதிக்கப்படுவோம் என அரசு ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது.

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒத்த பாதிப்பு எண்ணிக்கை 2,772,401-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் 100,000 பேரில் சராசரியாக 104 பேர் பாதிக்கப்படுவதாக இருந்த நிலை மாறி, இப்போது 130 பேர் பாதிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜேர்மனியில் மொத்தம் 10.3 சதவீத மக்கள் மட்டுமே தங்கள் முதல் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு பின்தங்கியிருப்பதை குறிக்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்