தேவையில்லாமல் இந்த நாடுகளுக்கு செல்லவேண்டாம்... ஜேர்மனி வலியுறுத்தல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

தனது எல்லைகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ள ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு தேவையில்லாமல் பயணிக்கவேண்டாம் என தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

அந்த நாடுகளிலிருந்து வருவோர் யாரானாலும், ஜேர்மனிக்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து, தங்களுக்கு கொரோனா இல்லை என்னும் ஆவணத்துடன் வந்தால்தான் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்படி தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூபிக்கும் ஆவணத்துடன் வந்தாலும், ஜேர்மனிக்குள் நுழைந்ததும் அவர்கள் 10 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஜேர்மனியில் மூன்றாவது கொரோனா அலையை கவனிக்காமல் விட்டால், நாளொன்றிற்கு 100,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளது என Robert Koch நிறுவனத்தின் தலைவரான Lothar H. Wieler எச்சரித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்