ஜேர்மன் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட இருந்த அகதி வாபஸ் வாங்கினார்: பின்னணி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட இருந்த அகதி ஒருவர் தன் வேட்பு மனுவை வாபஸ் வாங்கிவிட்டார்.

சிரிய அகதியான Tareq Alaows (31), ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்த செய்தி, பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானது.

ஆனால், Tareq இப்போது தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்ட Tareq, இனவெறுப்புத் தாக்குதல்களும் மிரட்டல்களும்தான், தான் பின்வாங்க காரணம் என்று கூறியுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் சிரியாவிலிருந்து தப்பி வந்த Tareq தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்தபோது, அதை சிலர் பாராட்டினாலும் பலருக்கு ஒரு அகதி ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினராவது பிடிக்கவில்லை போலும்.

எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பயங்கர மிரட்டல்கள் வருகின்றன, அதனால்தான் நான் வாபஸ் வாங்கிவிட்டேன் என்றார் Tareq.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்