பற்றியெரிந்த நெருப்பு... மொத்தமாக கருகி சேதமான 40 பேருந்துகள்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியின் Düsseldorf நகரில் ஒரு போக்குவரத்து நிறுவனத்தின் காட்சி அறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 பேருந்துகள் மொத்தமாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

Düsseldorf நகரின் மேற்கில் உள்ள ஒரு போக்குவரத்து நிறுவனத்தின் காட்சி அறையிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டது.

வியாழக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில் 40 பேருந்துகள் மொத்தமாக எரிந்து சாம்பாலாகியுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், இரவு முழுவதும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்தின் போது தொடர்ந்து வெடிக்கும் சத்தமும் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தீயணைப்பு வீரர்களின் சமயோசித முடிவால், அருகாமையில் உள்ள டிராம் பணிமனை ஒன்று தப்பியுள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரிக்கப்படுவதாகவும், பல மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்