ஏப்ரல் மாதம் ஜேர்மனியில் நிகழவிருக்கும் மாற்றங்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

ஏப்ரல் மாதம், கொரோனா கட்டுப்பாடுகள் முதல் ஓட்டுநர் உரிமங்கள் வரை பல மாற்றங்களை ஜேர்மனியில் கொண்டுவர உள்ளது.

அப்படி என்னென்ன மாற்றங்கள் நிகழ உள்ளன என்று பார்க்கலாம்...

பள்ளிகளிலும் நிறுவனங்களிலும் தொடர்ந்து ஒழுங்காக கொரோனா பரிசோதனைகள்

ஈஸ்டர் விடுமுறைகளுக்குப் பின் பள்ளிகள், பகல் நேர குழந்தைகள் காப்பகங்களில், பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவருக்கும் வாரம் இருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

அதேபோல், நிறுவனங்களும் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஏப்ரல் 18 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதிவரை பொதுமுடக்கத்தை நீட்டிக்க, சேன்ஸலர் ஏஞ்சலாவும் மாகாணங்களின் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

ஈஸ்டர் பண்டிகைக்குப்பின் பொது மருத்துவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி

ஈஸ்டர் பண்டிகைக்குப்பின் பொது மருத்துவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதியளிக்கப்பட உள்ளது.

ஜேர்மனியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி

விரைவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி ஜேர்மனிக்கு வர உள்ளது.

பொது விடுமுறைகள்

ஜேர்மனி முழுவதும், ஏப்ரல் 2 அன்று புனித வெள்ளி மற்றும் ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய நாட்கள் ஈஸ்டர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, அன்று கடைகள் மூடியிருக்கும், பெரும்பாலான நிறுவனங்களுக்கு விடுமுறையும் அளிக்கப்படும்.

தனியார் நிறுவனங்களுக்கு ஊதிய உயர்வு

ஏப்ரல் மாதம் முதல், தனியார் நிறுவன ஊழியர்களில் ஊதியம் 1.4 சதவிகிதம் உயர்த்தப்பட உள்ளது. அதாவது, ஒவ்வொருவரும் மாதம் ஒன்றிற்கு, குறைந்தது 50 யூரோக்களாவது அதிகம் வீட்டுக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

குறைந்தபட்ச ஊதியமும் உயர்வு

மருத்துவ சேவை (care workers) செய்வோருக்கு, எப்ரல் 1 முதல் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட உள்ளது, கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியில் வெவ்வேறு அளவு ஊதியம் இருக்கும் நிலையில், இனி அதுவும் சமன்செய்யப்பட உள்ளது.

தானியங்கி கார் ஓட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு சாதாரண கார் ஓட்ட அனுமதி

தானியங்கி காரில் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் இனி சாதாரண கியர் உள்ள கார் ஓட்டவும் அனுமதியளிக்கப்பட உள்ளது.

இதுபோக, இறைச்சி தொழிலில் நிரந்தர பணியாளர்கள், வாகனங்களில் கோடை காலத்துக்கேற்ற டயர்கள், ரயில்களில் வாடிக்கையாளர் சேவையை அழைக்க இலவச தொலைபேசி வசதி என ஏராளம் மாற்றங்களை ஏப்ரல் மாதம் கொண்டுவர உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்