ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் புதிய தடை!

Report Print Basu in ஜேர்மனி
0Shares

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் இரவில் வெளிப்புறங்களில் கூட தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் 3வது அலையை தடுக்கும் முயற்சியில் அடுத்த வாரம் முதல் நர்சரியில் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்கப்படவுள்ளதாகவும் ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீப நாட்களாக ஜேர்மனியில் காலநிலை வெப்பமாக மாறியுள்ள நிலையில், தலைநகரில் உள்ள மக்கள் சுற்றுலா மற்றும் பார்ட்டிக்காக பொது இடங்களில் குவிந்து வருகின்றனர்.

இதனால், இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது, அதேசமயம், கடந்த மாதம் முதல் ஜேர்மனியில் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தீவிர மற்றும் அவசர மருத்துவத்திற்கான DIVI அமைப்பு, ஜேர்மனியில் உடனடியாக இரண்டு வாரங்கள் ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும், தடுப்பூசி போடும் பணிகள் விரைப்படுத்த வேண்டும் மற்றும் பள்ளிகளில் கட்டாய சோதனைகள் தேவை என்று கூறினார்.

இதன் அடிப்படையில் பெர்லின் நகர அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விரைவில் அறிவிக்கவுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் தனியாக அல்லது வேறு ஒருவருடன் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கட்டுப்பாடடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது உட்புறங்களில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஐந்து பேர் சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த செவ்வாய்க்கிழமை முதல், மக்கள் தங்கள் வீட்டார் தவிர வெளியில் இருந்து ஒரு நபருடன் மட்டுமே வீட்டுக்குள் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு வருடத்திற்கு முன்னர் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் பெர்லினில் விதிக்கப்பட்ட முதல் வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இதுவாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்