ஜேர்மனியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல் இந்திய வம்சாவளியினர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

இந்தியாவில் பிறந்த ஒருவர், ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற முதல்இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஹரியானாவில் பிறந்த ராகுல் குமார் என்பவர் பிராங்பர்ட் நகர நாடாளுமன்றஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியில் இந்திய வம்சாவளியினர் ஒருவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதுஇதுவே முதல் முறையாகும்.

கல்வி பயில்வதற்காக ஜேர்மனி சென்ற குமார், கணினி அறிவியல் பயின்றார்.பின்னர் பல வேலைகளை செய்தபின், 2013ஆம் ஆண்டு அவர் அரசியலில் நுழைந்தார்.

பிராங்பர்ட் பலதரப்பட்ட மக்கள் வாழும் ஒரு நகரமாகும்.பதின்ம வயது முதல் அங்கு வாழ்ந்துவரும் குமார், அரசியலிலும் ஈடுபட்டு, 2017ஆம்ஆண்டு உள்ளூர் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.

புலம்பெயர்தல் பின்னணி கொண்ட தான், ஜேர்மன் மக்களுடன் ஒன்றிணைந்து பலதரப்பட்டமக்கள் வாழும் ஒரு நகரத்துக்காக உழைப்பேன் என்பதே அவர் தன் பிரச்சாரத்தில்முன் வைத்த வாக்குறுதியாகும்.

அனைவருக்கும் ஜேர்மன் மொழியை இலவசமாக பயிற்றுவிக்கவேண்டும் என்பது அவரது

கோரிக்கைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்