ஜேர்மனியில் கடுமையான ஊரடங்கு விதிக்க வேண்டும்: முக்கிய தலைவர் அழைப்பு!

Report Print Basu in ஜேர்மனி
0Shares

ஜேர்மனி மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்கு தடுப்பூசி போடப்படும் வரை இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை விதிக்க வேண்டும் என்று ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (சி.டி.யு) தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சி.டி.யு தலைவர் Armin Laschet கூறியதாவது, வைரஸ் பாதிப்பை 100,000 பேருக்கு 100 தொற்றுக்களாக குறைக்க மற்றொரு கடுமையான ஊரடங்கு தேவை.

கட்டாய சோதனை, டிஜிட்டல் தொடர்பு தடமறிதல் மற்றும் மாதிரி திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை மீண்டும் திறக்க சாத்தியமாகும்.

பின்னர் நாம் கவனமாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பக்கக்கூடிய புதிய காலகட்டத்திற்கு நகர முடியும்.

மூன்று வார காலத்தில் எந்த குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை.

முன்னதாக திங்களன்று, மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை குறைக்க இரவில் ஊரடங்கு உத்தரவு விதிக்கலாம் மற்றும் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என Armin Laschet அழைப்பு விடுத்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்