ஜேர்மனிக்கு 'Bridge Lockdown' தேவை! வலியுறுத்தும் முக்கிய நபர்

Report Print Ragavan Ragavan in ஜேர்மனி
0Shares

ஜேர்மனிக்கு தற்போது கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் தேவைப்படுகிறது என ஏஞ்சலா மெர்க்கலின் கட்சித் தலைவர் Armin Laschet வலியுறுத்தியுள்ளார்.

ஜேர்மனியின் CDU கட்சி தலைவரும், North Rhine Westphalia மாநிலத்தின் தலைவருமான Armin Laschet, நாடு கொரோனா வைரஸின் முன்றாவது அலையின் தாக்கத்தை கட்டுக்கு கொண்டுவர மிகவும் போராடிவருவதாக கூறியுள்ளார்.

நாட்டில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதை தடுப்பதற்கு, ஜேர்மனிக்கு தற்போது கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் தேவைப்படுகிறது என அவர் கூறுகிறார்.

அதாவது, மக்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளும் காலத்திற்கு பாலம் போல கடந்து செல்லும் வகையில் ஜேர்மனி ஒரு ஊரடங்கை நடைமுறைக்கு தோண்டுவரவேண்டும் என்கிறார்.

அவர் கூறுகையில், "நமக்கு bridge lockdown தேவை. அதாவது மக்கள் தங்களுக்கான தடுப்பூசிகளைப் பெற்று, எதிர்ப்பு சக்தியை பெற்ற சுற்றுச்சுழலுக்கு கடந்து செல்லக்கூடிய பாலம் போன்ற அந்த ஊரடங்கு இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "நமது இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கும் இந்த நேரத்தில், சற்று தாக்குப்பிடித்து கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தீர்மானிக்க, ஏப்ரல் 12-ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள 16 மாநில தலைவர்களுடனான கூட்டத்தை இந்த வாரமே நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்