பெட்ரோலுக்காக ஜேர்மனிக்குள் வரும் வெளிநாட்டினர்... இன்று முதல் ஜேர்மனி அறிமுகம் செய்துள்ள புதிய விதி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

பெட்ரோலுக்காக ஜேர்மனிக்கு வரும் நெதர்லாந்து நாட்டவர்களுக்கு இன்று முதல் புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஜேர்மனி.

நெதர்லாந்தைவிட ஜேர்மனியில் பெட்ரோல் விலை கொஞ்சம் குறைவு. ஆகவே நெதர்லாந்து நாட்டினர் பெட்ரோலுக்காக ஜேர்மனிக்கு வருவது வழக்கம்.

ஆனால், ஜேர்மனிக்கு வரும் நெதர்லாந்து நாட்டினர் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூபிக்கும் ஆவணத்துடன் வந்தால்தான் இனி அவர்கள் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஜேர்மனி அறிவித்துவிட்டது.

இதனால், எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

நெதர்லாந்தில் கொரோனா பரவல் அதிகம் காணப்படுவதால், ஜேர்மனி நெதர்லாந்தை அபாய நாடாக அறிவித்துள்ளது.

ஆகவே, ஜேர்மனிக்கு வருவோர் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூபிக்கும் ஆவணத்துடன் வருவதுடன், தங்கள் பயணம் குறித்து முன்கூட்டியே ஒன்லைனில் பதிவு செய்யவும் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி பணி புரிவோருக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்