ஜேர்மனியில் கடுமையான ஊரடங்கு விதிப்பது தொடர்பில் அதிபர் மெர்க்கல் என்ன முடிவெடுத்துள்ளார்? வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in ஜேர்மனி
0Shares

ஜேர்மனியில் தொற்று விகிதம் மிக அதிகமாக இருப்பதால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாட்டில் குறுகிய, கடினமான ஊரடங்கு விதிக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் ஆதரவு தெரிவித்திருப்பதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கொரோனாவின் 3வது அலையை கட்டுப்படுத்த ஜேர்மனி திணறி வருவதால், பல மாநில தலைவர்கள் குறுகிய கடுமையான ஊரடங்கு விதிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஜேர்மனியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகாரித்து வருவதாக குறிப்பிட்ட அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் Ulrike Demmer, குறுகிய, கடுமையான ஊரடங்கிற்கு ஒவ்வொரும் அழைப்பு விடுப்பது சரியானது என கூறினார்.

1,00,000 பேருக்கு என்ற விகிதத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை 100க்கு கீழே நிலையாக கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

பிராந்தியத்தை விட நாடு தழுவிய நடவடிக்கைகள் தேவையா என்பதை அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், விதிமுறைகளின் வரம்பு ஏற்றுக்கொள்ள உதவாது என்று Demmer கூறினார்.

தற்போது 1,00,000 பேருக்கு என்ற விகிதத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 110.1 ஆக உள்ளது என்று ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்