கமல் மகள் ஸ்ருதிஹாசனுக்கு கொலை மிரட்டல்!

Report Print Santhan in கிசுகிசு

பிரபல நடிகை மற்றும் கமலஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசனுக்கு மருத்துவர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திரைஉலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையான ஸ்ருதிஹாசனின் டுவிட்டர் பக்கத்திற்கு கர்நாடகவைச் சேர்ந்த மருத்துவர் கே.ஜி.குருபிரசாத் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் முதலே தவறான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளால் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்ருதிஹாசன் சென்னை சைபர் கிரைம் பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதில் தனக்கு தரக்குறைவான வார்த்தைகளை குறுஞ்செய்தி அனுப்பி வந்ததையும் தன்னை நெருங்க நினைத்தால் குத்திக் கொலை செய்துவிடுவேன் என அவர் மிரட்டியதையும் அவர் ஸ்நாப் சாட் எடுத்து தனது புகாரில் இணைத்துள்ளார்.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments