அனுஷ்காவுக்கு அடுத்த வருடம் திருமணம்: யாரை மணக்கிறார் தெரியுமா?

Report Print Aravinth in கிசுகிசு

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்காவிற்கு திருமணம் முடிவாகியிருப்பதாகவும், பிரபல ரியல் எஸ்டேட் உரிமையாளரை மணக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை அனுஷ்கா. குறுகிய காலத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

பல வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இவர், பெங்களூருவிலும் ஐதராபாத்திலும் சொந்தமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்துள்ள பிரபல ரியல் எஸ்டேட் அதிபரை அடுத்த வருடம் மணம் முடிக்க போகிறாராம்.

மேலும், திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விட அனுஷ்கா திட்டமிட்டு உள்ளாராம்.

இந்நிலையில், தற்போது சி–3, பாகுபலி–2, பாக்மதி, ஓம் நமோ வெங்கடேசாய ஆகிய 4 படங்களில் நடித்து வரும் இவர் திருமணத்துக்கு முன்பு இந்த படங்களை முடித்து கொடுத்து விட முடிவு செய்துள்ளார்.

மேலும், வேறு எந்த புதிய படங்களிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments