தனுஷ் போன்றே நானும் அந்த பிரச்சனையை சந்தித்தேன்: குஷ்புவே சொன்ன தகவலால் பரபரப்பு

Report Print Fathima Fathima in கிசுகிசு

தனுஷ் தங்களுடைய மகன் என கூறிவரும் சிவகங்கையை சேர்ந்த தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆனால் தனுஷ் தன்னுடைய மகன் தான் என இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியுள்ளார்.

இவருக்கு ஆதரவாக ஏற்கனவே இயக்குனர் விசு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார், இந்நிலையில் குஷ்பு தன்னுடைய ஷோவில் சிவகங்கை தம்பதிகளை அழைத்து வந்து பஞ்சாயத்து நடத்தினார்.

அப்போது 1994ம் ஆண்டிலிருந்தே தனுஷ் தனக்கு தெரியும் என்றும், கஸ்தூரிராஜாவின் மகன் எனவும் கூறினார்.

மேலும் தான் சின்னதம்பி படம் நடித்த போது, அந்த படத்தை பார்த்து விட்டு கோயம்புத்தூரிலிருந்து வந்த குடும்பம் ஒன்று குஷ்புவை தன்னுடைய மகள் என உரிமை கொண்டாடியதாக தெரிவித்தார்.

தன்னுடைய வீட்டிற்கு வந்த குடும்பம், மூன்று வயதில் காணாமல் போன குஷ்புவே தன்னுடைய மகள் என்றும், படத்தை பார்த்துவிட்டு உரிமை கொண்டாடியதாகவும் தெரிவித்தார்.

இதனால் பெரும் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போதே சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments