இரண்டாவது முறை கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நடிகை

Report Print Aravinth in கிசுகிசு

1989 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் அறிமுகமாகி பின் தமிழ், மலையாளம், ஹாலிவுட் என பல மொழிகளில் தன் நடிப்பினால் பலரையும் கவர்ந்தவர் நந்திதா தாஸ்.

இவர் தமிழில் பாவேந்தர், கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு சௌமியா சென் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை காரணமாக 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்.

இதையடுத்து மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சுபோத் மஸ்காரா என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு விஹான் 6 வயதில் மகன் உள்ள நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments