சீனியர் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: நடிகை பார்வதி ஓபன் டாக்

Report Print Santhan in கிசுகிசு

பட வாய்புகள் தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தார்கள் என்று பிரபல நடிகை பார்வதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷின் மரியான், பூ, பெங்களூர் டேஸ் போன்ற படங்களில் நடித்தவர் பார்வதி. சினிமா துறையில் வழக்கமாக நடிகைகளை எப்படி நடத்துவார்கள் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மை என பார்வதி கூறியுள்ளார்.

அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில், பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைப்பார்கள். மலையாள சினிமாவில் நான் இதை பல முறை சந்தித்துள்ளேன். பல சீனியர் நடிகர்கள், இயக்குனர்கள் நேரடியாகவே கேட்பார்கள். சினிமா என்றால் அப்படி தான் இருக்கும் என சிலர் அறிவுரை செய்து என்னை அழைப்பார்கள்.

அப்படி பட்டவர்களின் படங்களை தான் நிராகரித்துள்ளேன். அப்படி செய்துதான் படவாய்ப்பு பெறவேண்டும் என்றால் அது வேண்டாம். நடிப்பதை தவிர வேறு வேலை செய்யமுடியாதா, என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments