அஜித் ரசிகர்கள் இப்படியா செய்வார்கள்..விவேகம் டீஸரால் தியேட்டருக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்!

Report Print Santhan in கிசுகிசு

பிரபல திரைப்பட நடிகரான அஜித்தின் விவேகம் படம் டீஸர் நேற்று வெளியானது. இதை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் டிரண்டாக்கி கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல தனியார் தியேட்டர் நிர்வாகம் ஒன்று சமூகவலைத்தளான டுவிட்டரில் விவேகம் டீஸர் ரிலீஸ் நிகழ்வை, நள்ளிரவில் பார்த்து ரசித்த அஜித் ரசிகர்கள், உணர்ச்சிவசப்பட்டு, ஸ்கீரின் பாலை ஊற்றியதால் சேதமாகிவிட்டதாக தெரிவித்துள்ளது.

விவேகம் படம் டீசர் வெளியாவதால் அதை நேரலையில் காட்டுவதற்கு திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் தியேட்டர் நிர்வாக ஒன்று முடிவு செய்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பையும் தியேட்டர் வெளியிட்டிருந்தது.

இதனால் அங்கு ரசிகர்கள் குவிந்ததால், அரங்கமே ஆர்ப்பரித்தது. ஆனால் உணர்ச்சிவசத்தில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஸ்கீரினில் ரசிகர்கள் சிலர் பாலாபிஷேகம் செய்துவிட்டனராம்.

இதுகுறித்து, தியேட்டர் நிர்வாகம் தனது டுவிட்டரில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்வர் ஸ்கிரீனில் பால் அபிஷேகம் செய்துவிட்டனர். நாங்கள் முழு சுதந்திரம் கொடுத்தோம். பதிலுக்கு நாங்கள் இதை பெற்றுள்ளோம். நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments