பலன் தரும் கொய்யா இலைகள்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
பலன் தரும் கொய்யா இலைகள்

நன்கு பழுத்த கொய்யாவானது,நான்கு ஆப்பிள்களுக்கு சமமான சக்தியை கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது.

இதன் இலைகள் வெப்பமண்டலநாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களான வைட்டமின் சி, மற்றும் க்யூயர்சிடின்,ஃபிளாவனாய்டுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

  • பாக்டீரியா காரணமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டால் கொய்யா இலையில் தேநீர் செய்து சாப்பிடவேண்டும். இந்த தேநீரை பருகினால் எந்த காரணத்தினால் வயிற்றுபோக்கு ஏற்பட்டிருந்தாலும் குணப்படுத்திவிடும்.
  • தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.
  • அதுமட்டுமின்றி இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில்பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
  • வகை 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து இந்த தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில் மாறுதல்கள் ஏற்படும்.
  • மலச்சிக்கலை போக்குவதுடன், இருமல், தொண்டை, காய்ச்சல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றது.
  • கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.
  • கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி வலுபெறும்.
  • மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் பெருங்குடல், வாய், சருமம் மற்றும் நுரையீரல் தொடர்பான புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments