காளான் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Report Print Nayana in ஆரோக்கியம்
காளான் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் காளான் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு அதிகமாகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் என கண்டறியப்படுள்ளது.

இது பாசி வகையை சார்ந்த தாவரம். இதில் பெரும்பாலும் விஷக் காளான் உள்ளன. அதே போல் மிக அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட காளான்களும் உள்ளன.

இவற்றுள் மூன்று வகையான காளான் சாப்பிடப்படுகின்றன.அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான். இதில் ஒவ்வொரு காளானும் சிறந்த பயன்களைத் தருகின்றது.

மூன்றுமே புற்று நோயை தடுக்கும் சக்தி கொண்டவை.எய்ட்ஸ்க்கும் மருந்தாக பயன்படுகிறது இந்த காலான்.குறிப்பாக வைக்கோல் காளான் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் நடந்த காளான் பற்றிய ஆய்வில், நான்கு வாரங்கள் இந்த காளான் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபித்துள்ளார்கள்.

ஜப்பான் மற்றும் சைனாவில் சுமார் 21- 40 வயது வரை உள்ளவர்களை தினமும் காளான் உண்ண சொல்லியிருக்கிறார்கள்.

தொடர்ந்து நான்கு வாரம் அவர்கள் எடுத்துக் கொண்ட பின்னர் அவர்களின் செல்களை ஆய்வு செய்ததில், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும் டி- செல் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆய்வில் பங்கு பெற்ற அனைவரும் சைவமாக இருக்கக் கூடாது. தேநீர் அருந்தக் கூடாது.

ஏனெனில், காய்கறிகளிலும், தேநீரிலும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால், அவைகளுடன் காளான் சக்தியை ஒப்பீடு செய்வது கடினம்.

காளானின் மருத்துவ பயன்கள்

உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கிறது,மாரடைப்பை தடுக்கிறது,உயர் இரத்த அழுத்தம் உருவாவதை தடுக்கிறது.குறைந்த இரத்த அழுத்தம் ஏற்ப்படாமல் தடுக்கிறது காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்பும் வருவது தவிர்க்கப்படுகிறது.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.மலட்டுத்தன்மை போக்கும், கருப்பை நோய்கள் தடுக்கும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

எச்சரிக்கை குறிப்பு

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.சில வகை காளான்களை உண்ணலாம். சிலவகை, போதை தரும்.

சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணம் உடையதாகவும் இருக்கும்.

விஷக்காளானை உண்டுவிட்டால் உடனடியாக சோம்புக்கஷாயம் பருகவும் சோம்புக்கஷாயம், பாம்பின் விஷம், காளான் விஷம் இவற்றை முறிக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments