முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்
முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முந்திரிப் பருப்பானது அதிகளவு கனியுப்புக்களை கொண்டது. அதன் பழம் மரங்களில் தொங்கிய வண்ணம் காணப்படுகிறது, பழத்துக்கடியில் அதன் விதையை கொண்டுள்ளது.

இது வருடம் முழுவதும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதன் பழங்களும், விதைகளும் பலவகையான பயன்பாடுகளை கொண்டுள்ளன.

அது உடல் கொழுப்பின் அளவை கூட்டுகின்றது என்பதுக்கப்பால் பல வகையான நன்மைகளையும் கொண்டுள்ளது.

இவை நார்களை கொண்டுள்ளது. இந் நார்கள் உடலினால் தொகுக்கப்பட முடியாதவையாகும். இவை உணவுச் சமிபாட்டில் உதவுவதுடன், சமிபாட்டு நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

முந்திரிப் பருப்புகளுக்கு கொலஸ்திரோலை குறைக்கும் பண்பு உள்ளது. இவை LDL இன் அளவைக் குறைத்து HDL இன் அளவைக் கூட்டுகின்றன.

இது Omega 3 இனை கொண்டிருப்பதால் செயற்பாடுகளை கூட்டுகின்றது. உடலிலுள்ள மேலதிக கொழுப்புக்களை எரிக்கின்றது.

கையளவு முந்திரிப் பருப்புக்களை உட்கொள்வதால், ஏற்படும் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments