முடிவளர..முக பளபளப்புக்கு! மாதுளையின் முத்தான நன்மைகள்

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு, மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.

மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்துக் காணப்படுகின்றது.

இதில் புரதம், கொழுப்பு, மாவு, தாதுப்பொருள் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

பயன்கள்
 • புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவி வந்தால், பூச்சி வெட்டு உள்ள இடத்தில் நன்றாக முடி வளரும்.
 • 3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு ஆகிய இரண்டையும் முதல் நாள் இரவே சுடு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.
 • மாதுளம் பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து அதை பவுடராக்கி அதனுடன் பயத்தம் பருப்பு பவுடரை சம அளவு கலந்து, தினமும் குளித்த பிறகு இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நமது உடலில் உள்ள துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகிவிடும்.
 • ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.
 • ஒரு மாதுளம் பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஆற வைத்து அந்த தண்ணீரில் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

 • மாதுளம்பழ விழுதையும், வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாக குழைத்து அதை தோலில் தொய்வு ஏற்பட்டிற்கும் இடத்தில் பேஸ்ட்டாக தடவி பின்பு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும், இவ்வாறு செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.
 • மாதுளைப் பழத்தை தொடர்ந்து நாற்பது நாட்கள் ஜூஸ் செய்து அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீக்கி, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் இதனால் நினைவாற்றல் பெருகும்.
 • மாதுளம் பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் காணாமல் போய்விடும்.
 • மாதுளம் பழ சாறையும், அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வருவது நிற்கும்.
 • மாதுளம் சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சலை தடுக்கும்.
 • மாதுளம் பழச் சாற்றினை ஒரு பாத்திரத்தில் விட்டு வெயிலில் சிறிது நேரம் வைத்து பின்பு அதை அருந்தினால் பற்களும், எலும்பும் உறுதியாகும்.
 • விக்கல் உண்டாகும் போது சாதாரணமாக மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால், விக்கல் நின்றுவிடும்.
 • மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டால், உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகி, உடலின் வலிமை கூடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments