ஆண்கள் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய உணவுகள்

Report Print Aravinth in ஆரோக்கியம்

உடலில் இருக்கும் இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் முக்கியமான ஒன்று.

ஏனெனில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீர்குலைவு பல்வேறு நோய்களுக்கு வித்திடும்.

இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்கள் இரத்த ஓட்ட குறைபாடுகளால் ஏற்படுகின்றன.

எனவே, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள சில உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை தினம் ஒன்றாக உட்கொண்டால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் சிறுநீரகத்தை சுத்திகரித்து, இரத்தத்தில் உள்ள சோடியத்தை வடிகட்டி இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும்.

காரட்

காரட்டில் பொட்டாசியம் மிகுந்த அளவில் காணப்படுகிறது. எனவே தினமும் இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதுடன், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் கலோரிகள் குறைந்து நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் என சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சத்துகள் அனைத்துமே இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை உடையவை.

தர்பூசணி

தர்பூசணிப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, இரும்பு சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்பு சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.

மிகச் சிறந்த விட்டமின் சி, விட்டமின் ஏ இதில் உண்டு. இதைவிட தேவையான அளவு விட்டமின் பி6ம், பி1ம் கணிப்புக்களான பொட்டாசியம் மாங்கனீசும் உண்டு.

ஆரஞ்சு

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும்.

மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

திராட்சை ஜூஸ்

அனைவரும் விரும்பி சாப்பிடும் திராட்சை பழத்தை பழமாக சாப்பிடுவதை விட ஜூஸ் செய்து குடித்தால், இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம்.

திராட்சை ஜூஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை தான் காரணம்.

மேலும் திராட்சை ஜூஸ் இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதைத் தடுக்கும்.

திராட்சை ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments