ஜில் தண்ணீர் குடிப்பது ஆபத்தா?

Report Print Printha in ஆரோக்கியம்

குளிர்ச்சித் தன்மையை தரக்கூடிய உணவுப் பொருட்களை சாப்பிடுவதை விட, ஃப்ரிட்ஜில் வைத்து, குளிரூட்டப்பட்ட தண்ணீரை குடிப்பதையே பலரும் அதிகமாக விரும்புகின்றார்கள்

ஆனால், ஜில்லென்று தண்ணீர் குடிப்பது நமது உடல்நலத்திற்கு மிகவும் கெடுதலானது. ஏனெனில் இதனால் பல தீங்குகள் நமக்கு ஏற்படுகிறது.

இந்த ஜில் வாட்டரானது, குளிர்காலத்தை விட கோடைக் காலத்தில் தான் இரட்டிப்பான மடங்கில் நம்மை அதிகமாக பாதிக்கச் செய்கிறது.

ஜில் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்
  • தினமும் நாம் ஜில்லென்று ஃப்ரிட்ஜில் வைத்த தண்ணீரைக் குடிப்பதால், நமது உடலின் செரிமான மண்டலத்தை பாதிப்படையச் செய்கிறது.
  • நமது உடம்பில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுவதையும் அழித்து, சீரான இதய துடிப்பின் அளவை குறைத்து, இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது.
  • குளிர்ச்சி தன்மை அதிகம் உள்ள நீரை குடிப்பதால், தொண்டைப் புண்ணை ஏற்படுத்தி, அதன் காரணமாக வாய் புண் போன்ற பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது.
  • நாம் தினமும் அதிகமாக ஜில் தண்ணீரைக் குடித்து வந்தால், நமது உடலில் இருக்கும் நரம்பு மண்டலம் அதனுடைய வலிமையை இழக்கச் செய்கிறது.
  • குளிர்ச்சியான தண்ணீரைக் குடித்து வந்தால், நமது உடம்பில் நெஞ்சு சளி அதிகரித்து, மூச்சுத் திணறல், மாரடைப்பு மற்றும் அதிகமான உடல் சூடு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments