பலருக்கு வரும் இந்த நோய் உங்களுக்கு வராம இருக்கணுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்

Report Print Raju Raju in ஆரோக்கியம்
996Shares
996Shares
lankasrimarket.com

மனிதன் உயிருடன் வாழ அதிமுக்கியம் வாய்ந்த உடலுறுப்பு இதயம் ஆகும். முன்பெல்லாம் இதய நோய் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தான் வரும்.

ஆனால் தற்போது மாறி வரும் வாழ்க்கை சூழலாலும், உணவு பழக்கத்தாலும் எல்லா வயதினருக்கும் இதய நோய் வருகிறது.

சரி இதய நோய் வராமல் தடுத்து, இதயத்தை பலமாக்குவது எப்படி?

புகைப்பிடிப்பதை நிறுத்துவது

இதய கோளாறுகள் ஏற்ப்பட்டு மாரடைப்பு வருவதற்கு புகைப்பிடித்தல் மிக பெரிய காரணமாக உள்ளது என கார்டியாலிஜிஸ்ட் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த பழக்கத்தை தவிர்த்தால் இதயத்துக்கு நல்லது.

உடற்பயிற்சி

35 வயதுக்கு மேற்ப்பட்ட நபர்கள் தினமும் குறைந்தது 2 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்தால் மாரடைப்பு வருவதை 60 சதவீதம் அளவு தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தேனீர் அருந்துவது

காபியை விட டீ தேனீரானது இதயத்துக்கு பலம் அளிக்கிறது. அதிலும் ஒரு நாளைக்கு 3 கப் தேனீர் அருந்தினால் மாரடைப்பு அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்.

மன அழுத்தம் வேண்டாம்

தற்போது பரபரப்பாக உலகம் இயங்குவதால் எல்லாருமே ஒரு வித மன அழுத்தத்துடன் தான் உலா வருகிறார்கள். இதை தவிர்த்து மனதை ரிலாக்சாக வைக்க வேண்டும்

தர்பூசணி

தர்பூசணி பழத்தில் lycopene என்னும் இதயத்தை காக்கும் சக்தி உள்ளது. இதை சாப்பிடும் பட்சத்தில் இதய நோய் வராமல் தடுக்கிறது.

உணவு பழக்கம்

கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments