கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்!

Report Print Meenakshi in ஆரோக்கியம்

நமது உடல் நலத்திற்கு நம்மிடம் உள்ள சாதாரண பழக்கவழக்கங்கள் கூட பாதிப்பினையும் நோய் தொற்றினையும் ஏற்படுத்துகிறது. இப்பழக்கங்கள் நம் உடல்நலத்தில் சிறிது சிறிதாக பாதிப்பினை ஏற்படுத்தி நம்மை கொல்லும் விஷமாகிறது.

 • நம்மில் பெரும்பாலானோரிடம் இருக்கும் கெட்டபழக்கம் நகம் கடித்தலாகும். நாம் நகம் கடிக்கும் போது அதில் உள்ள கிருமிகள் உடலினுள் சென்று நோய் தொற்றினை ஏற்படுத்துகிறது.
 • நம் விரலில் ஏராளமான கிருமிகள், பாக்டீரியாக்களானது நிறைந்து இருக்கும். மூக்கினுள், வாயில் நாம் விரலை நுழைப்பதால் நம் கையில் உள்ள கிருமிகள் உடலினுள் எளிதாக ஊடுருவி பாதிப்பினை உண்டாக்குகிறது.
 • தரம் குறைவான கண்ணாடியினை உபயோகித்து சூரியனை பார்க்கும் போது அதிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நேரடியாக கண்ணின் கருவிழியினை தாக்கி காட்ராக்ட், பார்வை குறைபாடு, சில சமயங்களில் புற்றுநோயினை கூட ஏற்படுத்தும்.
 • கால்மேல் கால் போட்டு அமர்வதனால் இரத்தநாளங்களில் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் உயர்மனஅழுத்தம், நரம்பு சிதைவும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகும்.
 • கொழுப்பு நீக்கப்பட்ட பாலினை அருந்துவதால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
 • நகரத்தில் உள்ள பறவைகள் நோய் பரப்பும்தன்மை கொண்டவை. அதனால் அவற்றிற்கு உணவளிக்கும் போது கையிலோ அல்லது நமது அருகிலோ கொடுக்காமல் தனியாக பாத்திரத்தில் வைக்கலாம்.
 • உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்தி கொண்டு தூங்கும் போது கார்பன் டை ஆக்ஸைடின் அளவானது அதிகரித்து மூளைக்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
 • தொடர்ந்து ஹெட் போனை உபயோகிப்பதால் நோய்தொற்று ஏற்படுவது மட்டுமல்லாது, காது கேட்கும் திறனும் குறைகிறது.
 • அதிக எடையுள்ள பையினை நாம் சுமந்து செல்லும்போது நமக்கு தோல்வலி, முதுகு வலி ஏற்படுகிறது.
 • அதிக உயரமுள்ள ஹீல் செருப்புகளை அணியும் போது, குதிகாலில் எலும்பு முறிவானது ஏற்படுகிறது.
 • காலை உணவானது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இதனை தவிர்க்கும் போது உடல் ஆற்றலை குறைத்து, உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது.
 • மேக்கப் உடன் நாம் தூங்கும் போது நமது சருமத்தினை பாதிக்கிறது. நாம் கண்களில் போடும் மை, மஸ்காராவில் உள்ள கெமிக்கல்கள் கண்ணினை பாதித்து பார்வையினை குறைக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments