அடிவயிற்று கொழுப்பு குறையும்: இதை வாரம் 3 முறை குடியுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

உடல் பருமன் மற்றும் உயர் ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான பானம் இதோ!

தேவையான பொருட்கள்
  • கற்றாழை - 1 கொத்து
  • அன்னாசிப்பழம் - 2 துண்டுகள்
  • செலரி - சிறிதளவு
  • ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
  • ஆளி விதை - 2 ஸ்பூன்
  • பார்ஸ்லி - 1 கையளவு
செய்முறை

கற்றாழை மற்றும் அன்னாசி பழத்தை நன்கு கழுவி, தோலை நீக்கி, அரைத்தப் பின் அதனுடன் செலரி, ஆரஞ்சு ஜூஸ், ஆளி விதை மற்றும் பாஎஸ்லி ஆகிய பொருட்களை போட்டு மீண்டும் ஒருமுறை நன்கு அரைத்தால், பானம் தயார்.

குடிக்கும் முறை

இந்த பானத்தை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதை ஃப்ரிட்ஜில் வைத்து பின் குடிக்கலாம்.இந்த பானத்தை வாரத்திற்கு 3 முறைகள் என்று காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நன்மைகள்

இந்த பானம் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவை வேகமாக குறைத்து, உடல் எடையையும் வேகமாக குறைக்க உதவுகிறது.

குறிப்பு

இந்த பானத்தை குடிக்கும் நேரங்களில் தினமும் நல்ல ஆரோக்கியமான டயட், உடற்பயிற்சி மற்றும் 2 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments