சிறுநீர் குடித்தால் 50 கிலோ குறையுமா?

Report Print Basu in ஆரோக்கியம்

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் 6 ஆண்டுகளாக சிறுநீர் குடித்து வருவதன் மூலம் தனது உடலில் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து விளக்கியுள்ளார்.

Basildon பகுதியை சேர்ந்த 54 வயதான டேவ் மர்பி என்ற நபரே சிறுநீர் குடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான டேவ், நியூயோர்க் நகரத்தில் கணணி புரோகிராமராக பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில், 2011ம் ஆண்டு மே மாதம் விருப்பமின்றி சிறுநீர் சிகிச்சை குறித்த உரையாடலில் பங்கேற்றுள்ளார்.

அந்த உரையாடலுக்கு பிறகு அன்று முதல் தினமும் தனது சிறுநீரை குடித்து வரும் டேவ், அதன் நன்மைகள் குறித்து விளக்கியுள்ளார்.

முதல் சிறுநீர் குடிக்க கடினமாக இருந்தது, அதனால் ஜூஸ் உடன் கலந்து குடித்து வந்தேன். இதன் மூலம் 6 ஆண்டுகளில் 127 கிலோ இருந்த நான் 50 கிலோ குறைந்து 77 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளேன்.

மக்கள் சிறுநீரை கழிவு என்று நினைக்கின்றனர், அது முற்றிலும் தவறானது. சிறுநீர் நாம் குடிக்கும் நீரை விட சுத்தமானது. சிறுநீரை குடித்து வருவதின் மூலம் என் உடல் பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது

தற்போது என் தாயை இந்த சிகிச்சை முறையில் ஈடுபடுத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments