வேர்க்கடலையின் வியக்கத்தக்க அற்புத நன்மைகள் இதோ

Report Print Printha in ஆரோக்கியம்

ஆண்டுக்கு ஒருமுறை பயிராகக் கூடிய வேர்க்கடலை, பல கிளைகளைக் கொண்டு தரையில் படர்ந்து வளரக்கூடிய செடி வகையாகும்.

இதன் தண்டுகள் 30 முதல் 80 செ.மீ. நீளம் உடையதாகவும், மஞ்சள் நிறத்தில் பூக்களையும், ஆரோக்கிய சத்துகள் நிறைந்த கடலை தரையின் அடியில் வேர்ப்பகுதியில் கொத்துக் கொத்தாக காய்த்து இருக்கும்.

100 கிராம் வேர்க்கடலையில்,

 • எரிசக்தி - 570 கலோரி,

 • மாவுச்சத்து - 21 கிராம்,

 • நார்ச்சத்து - 9 கிராம்,

 • கொழுப்புச்சத்து - 48 கிராம்,

 • புரதச்சத்து - 25 கிராம்,

 • நீர்ச்சத்து - 4.26 கிராம்

மேலும் தயாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், விட்டமின் B6, E மற்றும் தாது உப்புகளான சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்களும், அர்ஜினைன், டைரோசின், டிரிப்டோபேன் போன்ற மருத்துவப் பொருட்களும் அதிகமாக நிறைந்துள்ளது.

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ நன்மைகள்

 • வேர்க்கடலையின் தோல் பகுதியில் உள்ள Bioflavonoid எனும் பொருள், உடலின் கொழுப்பைக் கரைப்பதோடு, புற்றுநோயை குணப்படுத்தவும் உதவுகிறது.

 • வேர்க்கடலையின் மெல்லிய சிவந்த தோலில் இருந்து பெறப்படும் Capric acid எனும் வேதிப்பொருள் பூஞ்சைக் காளான்களைப் போக்கும் தன்மைக் கொண்டது.

 • வேர்க்கடலையின் தோல் நீக்கி, இடித்து மாவாக்கி, அதை பாலில் வேக வைத்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மை தன்மை அதிகரிக்கும்.

 • அன்றாடம் கடலை எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர் எரிச்சல், சிறுநீர்த்தாரை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

 • ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெய்யை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கொனேரியா எனும் பால்வினை நோய் குணமாகும்.

 • வேர்க்கடலையில் உள்ள ரிபோஃப்ளேவின், நியாசின், தயாமின், விட்டமின் B6 மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் மூளையின் ரத்தோட்டத்தை சீராக்கி, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 • அடிபட்ட இடத்தில் ஏற்படும் ரத்த கட்டு வீக்கம், மூக்கில் ஏற்படும் ரத்தக்கசிவு, ரத்தம் உறையும் தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு வேர்க்கடலையின் தோல் பயன்படுகிறது.

 • அன்றாட உணவில் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்வதால், அது உடலின் கெட்ட கொழுப்பினை வெளியேற்றி, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

 • வேர்க்கடலையில் அதிகமாக உள்ள புரதச்சத்து, உடலில் இறந்த செல்களை ஈடுகட்டவும், உடல் மற்றும் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கவும் உதவுகிறது.

குறிப்பு

வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட, அதை வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிட்டால், அதனுடைய முழுமையான சத்துக்களையும் பெறலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றது.

வேர்க்கடலை அல்லது வேர்க்கடலை எண்ணெய்யை பயன்படுத்திய பின் சரும எரிச்சல் போன்ற ஒவ்வாமையை உணர்ந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments