இளநீருடன் 1 ஸ்பூன் தேன்: அற்புத மாற்றத்தை பாருங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.

இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • இளநீர் மற்றும் தேன் கலந்த பானத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விட்டமின் A, ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தை தடுத்து, முதுமை தோற்றம் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.
  • வயிற்றில் உற்பத்தியாகும் அதிகப்படியான அமில சுரப்பை குறைத்து, குடலியக்கத்தை சீராக்கி, அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • உடலில் உள்ள தொற்றுக்கிருமிகளை அழித்து, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  • உடலினுள் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
  • வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிப்பதால், சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றி, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments