பால் பொருட்களை சாப்பிடுவதால் பார்கின்சன் நோய் ஏற்படுமா?

Report Print Printha in ஆரோக்கியம்

ஹாட்வார்ட் பல்கலைகழகத்தின் சான் ஸ்கூல் ஆப் ஹெல்த் கொழுப்பு குறைந்த பால் பொருட்கள் அல்லது உறைந்த யோகர்ட் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடும் போது, அது பார்கின்சன் (Parkinson's) எனும் நோயை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்த ஆய்வில், கொழுப்பு குறைந்த பால் பொருட்களை சாப்பிடாதவர்களை விட, ஒரு நாளைக்கு 3 முறை கொழுப்பு குறைந்த பால் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு 34 சதவிகிதம் பார்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

அதேபோல் உறைந்த யோகர்ட் சாப்பிடாதவர்களை விட, ஒரு நாளைக்கு மூன்று முறை உறைந்த தயிர் சாப்பிடுபவர்களுக்கு தான் பார்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பால் பொருட்கள் மற்றும் பார்கின்சன் நோய் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கொழுப்பு குறைந்த பால் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதால் பார்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாவதற்கு இந்த ஆய்வு ஒரு சான்றாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர் கேத்ரின் ஹியூஸ் கூறியுள்ளார்.

பார்கின்சன் நோய்க்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments