ரத்தசோகை இருந்தால்.. இந்த பழத்தை சாப்பிடுங்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

இனிப்புச்சுவை கொண்ட சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், விட்டமின் A, C, புரதம், தாதுஉப்புகள், நார்ச்சத்து, குளுக்கோஸ், சுக்ரோஸ் போன்றவை அதிகமாக உள்ளது.

ரத்தசோகை உள்ளவர்கள் சீதாப்பழம் சாப்பிடலாமா?

ரத்தசோகையின் பாதிப்பு உள்ளவர்கள், தினமும் சீதாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ரத்த விருத்தியை குணமாக்கும்.

எனவே ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்கள், தினசரி சீதாப்பழத்தை சேர்த்துக் கொண்டால், விரைவில் அதிலிருந்து விடுபடலாம்.

சீதாப்பழத்தின் மருத்துவ நன்மைகள்

  • சீதாப்பழம் எலும்பு, முடி மற்றும் பற்களின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் கண் பார்வையை அதிகரிக்கச் செய்து, சளித் தொல்லையை குணமாக்குகிறது.
  • காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், அது அமிலத் தன்மையைச் சரிசெய்து, வயிற்றில் புண்கள் வராமல் தடுக்கிறது.
  • சீதாப்பழம் மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றி, வாதநோய், மூட்டுவலி, கீல்வாதநோய் போன்ற பாதிப்புகளை தடுக்க உதவுகிறது.
  • சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடல் வலிமையாகுவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியை ஆரோக்கியமாக்க உதவுகிறது.
  • சீதாப்பழத்தில் உள்ள மெக்னீசியம், நம் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்து, பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • சீதாப்பழத்தின் தோல், விதைகளை அரைத்து, அதை பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கி, கூந்தல் மிருதுவாகும்.
  • சீதாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி அளிப்பதுடன், மலச்சிக்கல் பிரச்சனையை கட்டுப்படுத்துகிறது.
  • சீதா மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோயை குணமாக்கவும், அதன் இலைகள், நோய்த் தடுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது.
  • சீதாப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடும் போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில் சீதாப்பழம் அதிக குளிர்ச்சித் தன்மை நிறைந்தது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments