2050-ல் பார்வையற்றோர் எண்ணிக்கை மூன்று மடங்காகும்: வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஆரோக்கியம்
44Shares
44Shares
ibctamil.com

பார்வையிழப்பால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை 2050-ல் மும்மடங்காக அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Lancet Global Health என்னும் மருத்துவ நிறுவனம் கண் பார்வையிழப்பு குறித்த ஆய்வை உலகின் 188 நாடுகளில் எடுத்து அதன் முடிவை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகில் பார்வையிழந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கையான 3.6 கோடி 2050-ஆம் ஆண்டில் 11.5 கோடியாக அதிகரித்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய மக்கள், ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி மக்கள் தான் அதிகளவில் பார்வை குறைபாடு மற்று பார்வையிழப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

உலக அளவில், மக்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளின் விகிதம் குறைந்துள்ளது.

ஆனால், மக்கள் தொகை அதிகரிப்பு, மருத்துவ முன்னேற்றத்தால் அதிக காலம் வாழும் வயதான மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பார்வையிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பல்வேறு கண் பார்வை கோளாறுகளுடன் 20 கோடி பேர் தற்போது உலகில் வாழ்ந்து வரும் நிலையில், 2050-ல் அது 55 கோடியாக உயர்ந்து விடும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவ பேராசிரியர் ருபெர்ட் போர்னே கூறுகையில், பார்வைக் கோளாறு மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை குறைக்கும்.

கண்புரை அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளுக்கு சிறப்பான முதலீடுகள் தேவை என்றும், பார்வை திருத்தும் கண்ணாடிகள் மக்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்