தக்காளியை எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்
203Shares
203Shares
lankasrimarket.com

தக்காளி சேர்த்து சமைத்த உணவை அதிகம் சாப்பிடுபவர்களின் சருமத்தை சூரிய ஒளியில் உள்ள Ultraviolet கதிர்கள் பாதிப்பதில்லை.

இருதயத்தைப் பாதிக்கக்கூடிய அதிக கொலஸ்ட்ராலை குறைக்கவும், உடலில் ஏற்பட்டிருக்கும் தொற்று நோய்களை சீர் செய்யவும் தக்காளியில் உள்ள நிகோடினிக் அமிலம் உதவுகிறது.

தக்காளிப் பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்

விட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிரம்பியிருக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லதான விட்டமின் ஏ சத்தினை அதிக உணவுகளில் பெற முடியாது.

அதேபோல் விட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இந்த வைட்டமின் இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

காலை நேரம், மதிய நேரத்தில் சாப்பிடலாம், இதில் உள்ள ஆர்கானிக் ஆசிட்கள் செரிமானம் சீராக செயல்பட உதவும். கணையத்துக்கும், வயிற்றுபகுதிக்கும் நல்லது.

இதில், உள்ள ஆக்ஸாலிக் ஆசிட் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும், சாப்பிட்ட உடனே படுத்தால் எதுகளிப்பு பிரச்சனையை ஏற்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்