இனிமேல் எலுமிச்சை தோலை தூக்கி போட மாட்டீங்க: அற்புத நன்மைகள்

Report Print Printha in ஆரோக்கியம்

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் சத்துக்களை விட எலுமிச்சையை அதன் தோலுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் தான் அதிகம் என்று சில ஆராயச்சி முடிவுகள் கூறுகின்றது.

எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

எலுமிச்சையை எப்படி தோலுடன் சாப்பிடுவது?
  • எலுமிச்சை பழத்தினை கழுவி ஃபிரிட்ஜில் உறைய வைத்த பின் அதன் இரு முனைகளையும் சீவி விட்டு அரைத்து அதை சூப், சாலட் மற்றும் பாஸ்தா போன்றவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம்.
  • உறைந்த எலுமிச்சை பழத்தின் தோலை துருவி அதை ஜூஸ், டீ அல்லது மில்க் ஷேக் போன்றவற்றில் கலந்தும் குடிக்கலாம்.
நன்மைகள்
  • செரிமானம் சீராகுவதுடன், வயிற்றில் ஏற்படும் தசைப் பிடிப்புகள் நீங்கும்.
  • ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் ரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும்.
  • கல்லீரல் நோய் மற்றும் ஸ்கர்வி நோயை குணப்படுத்த எலுமிச்சை தோல் பெரிதும் உதவுகிறது.
  • தினமும் எலுமிச்சை பழத்தின் தோலில் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டு வந்தால், சருமம் அழகாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers