கெட்ட கொழுப்பை கறைக்கும் பச்சை ஆப்பிள்: எவ்வளவு சாப்பிடலாம்?

Report Print Printha in ஆரோக்கியம்
404Shares
404Shares
lankasrimarket.com

சிவப்பு நிற ஆப்பிளை விட பச்சை ஆப்பிள் பழத்தில் விட்டமின்கள், தாதுப் பொருட்கள், ஆன்டி-ஆக்ஸிட்ன்டுகள் ஆகியவை அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே தினமும் ஒரு பச்சை ஆப்பிளை சாப்பிட்டு வந்தாலே போதும், பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

பச்சை ஆப்பிள் சாப்பிடுவதன் நன்மைகள்?
  • இதயத் தமனிகளில் அடைக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகமாக்கி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • பச்சை ஆப்பிளின் தோல் மற்றும் சதைப் பகுதியில் உள்ள நார்ச்சத்துகள், குடலின் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
  • சரும செல்களின் சேதம், முடி உதிர்வு, கருவளையம் மற்றும் பருக்கள் ஆகிய சரும பாதிப்புகளை தடுத்து, சருமம் எப்போதும் பொலிவுடன் பிரகாசிக்க உதவுகிறது.
  • பச்சை ஆப்பிளில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற சத்துகள் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தி, தைராய்டு ஹார்மோனின் சுரப்பை சீராக்கிறது.
  • பச்சை ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி- ஆக்சிடென்டுகள், குடலில் தங்கும் கிருமிகள், நச்சுகளை அகற்றி குடல் புற்றுநோய் போன்ற குடல் பாதிப்புகள் வராமல் தடுக்கிறது.
  • பச்சை ஆப்பிளானது வயதான காலத்தில் அதிக மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்