முளைக்கட்டிய வெந்தயம் சாப்பிடுங்கள்: 1 ஸ்பூன் மட்டும் போதும்

Report Print Printha in ஆரோக்கியம்

வெந்தயத்தின் விதைகள், இலைகள் என்று அனைத்துமே மிகவும் மருத்துவ குணம் கொண்டது.

அதுவும் வெந்தயத்தை சாதாரணமாக உட்கொள்வதை விட அதை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதால், இரட்டிப்பு பலன்களை பெறலாம்.

முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின் C, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது.

முளைக்கட்டிய வெந்தயத்தின் நன்மைகள்
  • டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்து விடும்.
  • முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால், அது பசி உணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடை மற்றும் உடல் சூட்டை குறைக்கிறது.
  • நம் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்வதை தடுத்து இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • முளைகட்டிய வெந்தயம் வைரஸ் தொற்று, காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
  • வயிற்று பொருமல், அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் உடனடித் தீர்வினை பெறலாம்.
  • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க உதவுகிறது.
  • தாய்பால் சுரப்பு அதிகமாகுவதுடன், பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற சருமப் பிரச்சனைகள் மற்றும் பொடுகுத் தொல்லைகள் வராமல் தடுக்கிறது.
வெந்தயத்தை எப்படி சாப்பிடலாம்?

முளைகட்டிய வெந்தயத்தை காலை உணவுக்கு முன் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் ஒரு மாதம் வரை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மட்டுமே நல்ல பலனை பெறலாம்.

குறிப்பு

முளைக்கட்டிய வெந்தயத்தை ஒரு நாளைக்கு 1 ஸ்பூன் அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்