வயிறு உப்பி இருக்கா? இதோ நிவாரணம்

Report Print Printha in ஆரோக்கியம்

நாம் சாப்பிடும் உணவுகள் சீராக செரிமானம் அடையவில்லை எனில் வயிறு உப்பிசம் அடைந்து வயிற்றில் கடுமையான வலியை உணரக் கூடும்.

இதனை சரிசெய்ய இயற்கையில் உள்ள சில அற்புதமான டிப்ஸ்கள் இதோ,

செரிமான பிரச்சனையை தடுப்பது எப்படி?
  • இஞ்சி கலந்த வெந்நீரை தினமும் காலை மற்றும் மாலையில் குடிக்கலாம். அல்லது உணவு சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம்.
  • சிறிதளவு சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அதை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, அதில் 1/2 டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
  • புதினாவின் இலையை உணவில் சேர்த்துக் கொண்டாலே செரிமான பிரச்சனை வராது. புதினாவை ஜூஸ் செய்து கூட குடிக்கலாம். இதனால் வயிற்று வலி, எரிச்சல், புளித்த ஏப்பம் ஆகியவை சரியாகும்.
  • 1/2 ஸ்பூன் ஓமத்தை 1 டம்ளர் நீரில் கலந்து அதை நன்கு கொதிக்க வைத்து காலை, மாலை குடித்து வந்தால் வயிற்று மந்தம் சரியாகும்.
  • இரவில் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அதை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் கெட்ட கொழுப்பு குறையும்.
  • உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து 50 மி.லி க்ரீன் டீ குடிக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு 100 மி.லி அளவுக்கு மேல் குடிக்கக் கூடாது.
  • சிறிதளவு நீரில் டீ தூளை போட்டு கொதிக்க வைத்து அதில் பெருஞ்சீரகத்தை வெறுமையாக வறுத்து அதனுடன் கலந்து நன்கு கொதித்த பின் அதை வடிகட்டி கருப்பட்டி சேர்த்து குடிக்க வேண்டும்.
  • 1/2 டீஸ்பூன் பனங்கற்கண்டு, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகிய இரண்டையும் ஒரு டம்ளர் பாலில் போட்டு மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். இதனால் மன அழுத்தம், செரிமான பிரச்சனை நீங்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்